Wednesday 1 June 2016

திருவிவிலியம் என்பது வெறும் வரலாற்று நூலா?


திருவிவிலியம் என்பது வரலாற்று நூல் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. ஆம்.. அது வரலாற்று நூலே... இறைவன் மனிதனை தேடி மண்ணுலகிற்கு வந்த மாபெரும் வரலாற்றை பறைசாற்றும் நூலே திருவிவிலியம்.

[யோவான் 20:31] ல் நற்செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார்: இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.


ஆனால் அது மட்டுமே அல்ல. இறைவன் மனிதனுக்காக, எனக்காகவும், உனக்காகவும் எழுதிய அன்பின் கடிதமே திருவிவிலியம். அதை வாசிக்கும்போது, அவர் நம் மனக்கண்களை திறந்து நம்முடன் உரையாடுவார். எம்மாவு செல்லும் வழியில் சீடர்களுடன் அவர் நடந்து செல்கிறார். அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறுகிறார், அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கபட்டிருந்தன. [லூக்கா 24:16]. மேலும், 31-ம் இறைவார்த்தையிலேயே அவர்கள் கண்கள் திறக்கின்றன. 

நாமும் இறைவன் நம் கண்களை திறந்து இறைவனை அறிய வழி செய்ய மன்றாடுவோம். 

No comments:

Post a Comment